"நண்பா நீ போராட வேண்டியது கரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்" நண்பரின் கல்யாண பேனரில் செய்த கலவரம்

30 October 2020

கரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சிலர் அதை வைத்தே மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் இப்போது பலருக்கும் காமெடி போல ஆகிவிட்டது. அந்த வகையில் நண்பரின் கல்யாண பேனரில் கரோனாவை வைத்து ஒரு கலவரமே செய்துள்ளனர் நண்பர்கள் சிலர்.

முள்ளுவாடி பகுதியில் ஆசிரியராக இருக்கும் பாலமுருகன் என்பவருக்கு இன்று திருமணம். நண்பரின் திருமணத்துக்காக நண்பர் சேர்ந்து புதுமையான பேனர் ஒன்றை அடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அந்த பேனர் பற்றி தான் பதிவிட்டு வருகின்றனர். அந்த பேனரில் மணமகன், மணமகள் என்று போடுவதற்கு பதிலாக தொற்றானவர், தொற்றிக்கொண்டவர் என்று எழுதியுள்ளனர்

அதோடு திருமண நாளை தொற்று உறுதி செய்த நாள் என்றும், கல்யாணம் நடைபெறும் இடத்தை தொற்று பரவிய இடம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு வாழ்த்து செய்தி பகுதியில், நண்பா நீ போராட வேண்டியது கரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன் என்று நக்கலாக எழுதியுள்ளனர். நண்பர்களின் பெயர்களுக்கு முன்பு சானிடைசர், விலகி இரு, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல், விழித்திரு, பாசிடீவ், முகக்கவசம், கோவிட், அச்சுருத்தும், சுடுநீர் என்று அடைமொழி போல வைத்துள்ளனர். இந்த திருமண பேனர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரோனா காலத்திலும் இப்படி கிரியேட்டீவாக யோசித்து பேனர் அடித்த நண்பர்களை சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் வருகின்றனர்.