தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவையோட்டி முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

30 October 2020

இந்தியாவின் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்படுவதால் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் வெங்கல சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, தங்க தமிழ்செல்வன், பி.டி.அரசகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள், முதல்வர், திமுக தலைவர் வருகையோட்டி மதுரை மாவட்டம் முழுதும் 4700 காவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்க்கொண்டு வருகின்றனர்.