தடுப்பூசி தொடர்பாக ஒன்றிய அரசு அறிக்கை!!

20 July 2021


இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை விநியோகிக்கப்பட்ட தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை பெற்று மாநில அரசுகளுக்கு விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இதுவரையிலான தடுப்பூசி கொள்முதல் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இதுவரை 42,15,43,730 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மாநிலங்கள் இதுவரை 40,03,50,489 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தியுள்ளன. இந்நிலையில் தற்போது மாநிலங்கள் வசம் 2,11,93,241 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு கூடுதலாக 71,40,000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.