இதழியல் மாணவர்களுக்கான "டேனிஷ் சித்திக்" உதவித்தொகை!!

20 July 2021


இதழியல் மாணவர்களுக்கான டேனிஷ் சித்திக் நினைவு உதவித்தொகை அறிவிப்பு.

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் இதழியல் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

புலிட்சர் விருது பெற்ற மறைந்த இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் பெயரில், கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆகாஸ் அறக்கட்டளை.

ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் aaghaz.foundation@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.