தைரியமே சிறந்த துணை

05 April 2021

* தைரியம் ஒன்றே சிறந்த துணையாகும். உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.
* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* நல்லவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். ஒருபோதும் அவர்களின் உள்ளம் நோகும் விதத்தில் நடப்பது கூடாது.
* கோபத்தை அறவே கைவிட்டவர்களின் வாழ்வில் துன்பத்திற்கு இடமே இல்லை.
* சுயநலத்தால் பொய் பேசுவது பாவமாகும்
.- ஜெயேந்திரர்