பொள்ளாச்சியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மையம்

11 January 2022

தற்பொழுது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மையத்தை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொரோனா பாதிப்பு, தொற்று அறிகுறிகள், தடுப்பூசி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறியதாவது:- கோவை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் 2 பேர் பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி, ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி படுக்கை  தொடர்பான சந்தேகங்கள், விவரங்கள், தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகராட்சி பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் விவரங்களை பெற்று அவர்களை தொலைபேசி மூலம் தினமும் தொடர்பு கொண்டு கண்காணித்து வருகின்றனர்.பொதுமக்கள் தொற்று அறிகுறி இருந்தால் எங்கு சென்று பரிசோதனை செய்வது, எத்தனை மணிக்கு செல்வது என்பது குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு மையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று பரவலை கட்டுப்படுத்த நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


G.கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி