மத்திய அரசை கண்டித்து விடுதலை போராட்ட வீரர்களின் முகமூடியை அணிந்து வாலிபர் சங்கத்தினர் பேரணி...

26 January 2022

மத்திய அரசை கண்டித்து 
விடுதலை போராட்ட வீரர்களின் முகமூடியை அணிந்து வாலிபர் சங்கத்தினர் பேரணி... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைப் போராட்ட வீரர்களின் முகமூடியை அணிவோம், மாநில உரிமைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 
வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் முகமூடி அணிந்து ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் 
இ. சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் ஊர்வலத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிகண்டன் துவக்கி வைத்தார், ஊர்வலம் உழவர் சந்தை முதல் துவங்கி உழவர் சந்தையில் தொடங்கி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நாராயணன் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.வைத்தியநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், திமுக நகர செயலாளர் டேனியல்ராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம்.கே.பழனி, விசிக மாவட்ட துணை செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, சிஐடியு மாவட்ட செயலாளர் மா செந்தில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் அலமேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பி.சேகர், வாலிபர் சங்க மாநிலக்குழு சுபாஷினி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர்
பி.சின்னராசு மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டன் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் முகமூடியை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள், ஊர்வலத்தை முடித்துவைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் பேசினார்.  ஜனவரி 26 இந்திய குடியரசு உருவானதும் இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்த அரசியலமைப்புச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதை குறிக்கும் சிறப்புவாய்ந்த இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து நிராகரிக்கப்பட்டு இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும், விடுதலைப்போராட்டத்தின் சமூக கலாச்சார பாரம்பரியங்களும் இழைக்கப்பட்ட, மாபெரும் அவமதிப்பாகும்.  எனவே ஒன்றிய அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்கள்... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா. வெங்கடேசன் கள்ளக்குறிச்சிமாவட்டம்