பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளை கணக்கெடுக்கும்  திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

13 October 2021

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கங்களை கணக்கெடுக்கும்  திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்தார்.

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தானமாகவும் காணிக்கையாக அளித்த நகைகளை கணக்கெடுக்கும்  திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார்.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 28கிலோ 705 கிராம் தங்கத்தை ஓய்வு பெற்ற நீதிபதி மாலா  மற்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை,துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பாளர் பொன்சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் தங்கத்தை தூய்மைப்படுத்தி, கணக்கெடுத்து மும்பை நிறுவனத்தில் ஒப்படைக்கும் பணி நடைபெற்றுது.

இந்நிகழ்ச்சியில் அறநிலை துறை அதிகாரிகள்,இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், வருவாய் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சாத்தூர்
க.அருண் பாண்டியன்