தூத்துக்குடியில் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உருவபொம்மைகள் எரிக்க முயற்ச்சி! எதிர் கட்சியினர் 30 பேர் கைது

15 October 2021

தூத்துக்குடியில் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உருவபொம்மைகள் எரிக்க முயற்ச்சி! எதிர் கட்சியினர் 30 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய  உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். 
மூன்று  வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். 
குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் 
மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்றோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் எதிர்கட்சிகள் சார்பாக இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி சாலையில் தந்தி அலுவலகம் முன்பு மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைபெற்ற இப் போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய பிரிவு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், எஸ்.டி.பி.ஐ, 
புரட்சிகர இளைஞர் முன்னணி, 
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, 
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, மக்கள் பாதை
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, நெய்தல் பாதுகாப்பு இயக்கம், 
தமிழர் விடியல் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, 
திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட இயக்கத்தினர் கலந்து கொண்டனர். 

இதனையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டவுண் டி.எஸ்.பி கணேஷ் ஆகியாரது  மேற்பார்வையில், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெய்பிரகாஷ் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது; இப் பாதுகாப்பையும் மீறி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி பக்கத்து சந்தில்   மறைத்துவைத்திருந்த மோடி உருவபொம்மையை ஓடி சென்று எரிக்க முயன்றார்; இதனை போலீசார் தடுத்து உருவ பொம்மையை பத்திரமாக கைப்பற்றினர். இதில் ஏற்ப்பட்ட சலசலப்பை பயன்படுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், மோடி அமித்ஷா உருவ படத்தை தீயிட்டு கொளுத்த முயன்றார் இதனைக் கண்ட டி.எஸ்.பி, ஆய்வாளர், காவலர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்  உருவ படங்களை கீழே தட்டிவிட்டனர் இதில் அவர் கையிலிருந்த எரிபொருள் தரையில் சிந்தி தீப்பற்றியது உடனே காவலர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்ப்பட்ட எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் தூத்துக்குடி முக்கியசாலையான வ.உசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

✍️சி.என்.அண்ணாதுரை.
தூத்துக்குடி.