நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 22 வீரர்கள் உயிரிழப்பு

04 April 2021

சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பிஜாப்பூர் மாவட்டத்தின் தரம் காட்டுப்பகுதியில் நேற்று சிறப்பு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுக்மா மற்றும் பிஜாப்பூர் எ்லலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த காட்டுப்பகுதியில் அவர்கள் நக்சலைட்டு எதிர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா்.

 பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா். இந்த சண்டையில் 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிஜாப்பூர் எஸ்.பி  தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்த 31 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.