தேவகோட்டை ஹோட்டல்களில் 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்-

16 September 2021

தேவகோட்டை ஹோட்டல்களில் 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடவடிக்கை

ஆரணியில் உள்ள ஹோட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி  உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஹோட்டலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள ஹோட்டலில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் மற்றும் மேஸ்திரி மாணிக்கம் ஆகியோர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூன்று ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன,மேலும் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 10 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் கூறுகையில் சாப்பிட உகந்தது இல்லாத உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்   உணவகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.