பொட்டலூரணியைத் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
08 December 2025
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பிரித்துப் பொட்டலூரணியைத் தனி ஊராட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பொட்டலூரணி மக்களை மேலும் அலைக்காமல், தாமதிக்காமல், ஊராட்சியின் பெரிய ஊரான பொட்டலூரணியில் முகாம் அமைத்து உரிய வீட்டு வரியினைப் பெற்று உரிய இரசீதினை பொட்டலூரணி மக்களுக்கு வழங்க வேண்டும். பொட்டலூரணி விலக்கு மற்றும் ஊர்ப்பகுதியில் எரியாமல் இருக்கும் அனைத்துத் தெருவிளக்குகளையும் உடனடியாக எரியவைக்கவேண்டும்.
பொட்டலூரணி மக்களுக்குக் கூடுதலான மேல்நிலை நீர்த் தொட்டி ஒன்றினை அமைத்து போதுமானதாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டிய பத்து பணிகளை முறையாகச் செய்யாமல் ஆண்டுகளாக ஒரே பணியிடத்தில் பணியாற்றும் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிச் செயலரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பிரித்துப் பொட்டலூரணியைத் தனி ஊராட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொற்றவை செய்தியாளர்
S.முகேஷ் குமார்
ஓட்டப்பிடாரம்.