Veera vanakkam

22 October 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளில் உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது
நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது,
 21.10.2025_ந் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளில் காவலர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் .G.S மாதவன், அவர்கள் தலைமையில்  கருப்பு பட்டை அணிந்து, அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், சரவணன், திருமால், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
 
கொற்றவை செய்தியாளர்  அ.ஐயப்பன்.