உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து ஓவிய போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்ப
01 August 2025
உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து ஓவிய போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ. குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போதைப்பொருள் குறித்தும் இதனால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் போதைப் பொருள்கள் ஏற்படும் தீமைகளை குறித்து மாணவர்களிடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டது இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை ஓவியமாக வரைந்து அசத்தினர் தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறை சார்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும் விளக்கி பேசினார்...
சப் எடிட்டர்... இரா.வெங்கடேசன்