தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழ கீழடுக்க சுழற்சி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தெற்கு பகுதிகளான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.