வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

19 November 2025

வங்கக் கடலில் வரும் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.....