"உலகம் உங்கள் கையில்": கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
05 January 2026
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக "உலகம் உங்கள் கையில்" என்னும் பெயரில் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், தமிழர்களான நாம் எப்போதும் கடந்த காலப் பெருமைகளைப் பேசுவதோடு, எதிர்காலப் பெருமைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு ஒருபோதும் நாம் தேங்கிவிடக் கூடாது.
"உலகமே உங்கள் கையில்" என்பதுதான் இன்றைய உண்மை.
திறன், பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட்டால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்.
பழைய பெருமைகளைப் போற்றுவதோடு, எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்...