பொங்கல் பண்டிகைக்கு 3000 ரூபாய் பணம்: தமிழக அரசு அறிவிப்பு...
04 January 2026
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பு உடன் இந்த ஆண்டு 3000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 4, 2026) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் (Rice Ration Cards) இந்த 3,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
சுமார் 2.22 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
ரொக்கப்பணம் 3,000 ரூபாயுடன் சேர்த்து பின்வரும் பொருட்களும் வழங்கப்படும்:
1 கிலோ பச்சரிசி
1 கிலோ சர்க்கரை
ஒரு முழு நீளக் கரும்பு
கூடுதலாக, தகுதியுள்ளவர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 5-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெறும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சென்று மக்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.