உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தில் இடியும் நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து புதியதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை வட்டார
08 December 2025
உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தில் இடியும் நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து புதியதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கொணலவாடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது இந்த கட்டிடமானது பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டியதால் சிதிலமடைந்தும் தற்போது தற்போது ஏற்பட்ட மழையின் காரணமாக விரிசல் ஏற்பட்டு இடியும் அபாயத்தில் உள்ளது எனவே பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பினால் கட்டிடத்தால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலமுறை வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம மக்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்றே பழைய கட்டிடத்தை ஆய்வு செய்யப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தவறினால் சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர் இந்த திடீர் முற்றுகையால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்