கரூர்:அரவக்குறிச்சி தாலுகா பகுதிக்கு உட்பட்ட மலையூர் முருகன் கோவிலில் இன்று காலை 11 மணியளவில் முருகனின் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கண்டு முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். மேலும் கோவில் உள்ள மூலவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்,மாலைகள் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
 செய்தியாளர் -S.சித்ரா சுரேஷ்