சவுதி அரேபியா மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி பேரு பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து புனித பயணத்திற்காக சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தில் 43 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முப்ரிகத் அருகே சென்றபோது அந்த வழியே வந்த டீசல் ஏற்றி வந்த லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தில் இருந்த 20 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட 42 பேர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பலரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த விபத்தில் ஒருவர் தப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய இந்திய பயணிகளின் குடும்பத்தினர் அவர்கள் குறித்த விவரங்களை 7997959754 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....