மக்களவையில் பேச அனுமதி மறுப்பு: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
03 February 2026
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்குத் திட்டமிட்டுத் தடை விதிக்கப்படுவதாகவும், இது அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், தேசப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விவகாரத்தில் உரையாற்ற முற்பட்டபோது, தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, சபாநாயகர் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் தடுத்திருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.