கரூர் மாவட்டத்தில் இன்று (11/12/2025) காந்திகிராமம் புனித தெரசா பள்ளியில் 337 பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கும், 401 பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு எளிதில் அணுகும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு வினா விடை அடங்கிய புத்தகங்கள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்