புதுச்சேரியில் விஜயின் மாநாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி யார்?
11 December 2025
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு தைரியமாக அனுமதி மறுத்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.
புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய்யே நேரடியாக போனில் பேசிய போதும் டிஐஜி சத்தியசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை. "ஒரு உயிர் போனாலும் நான் தான் பதில் சொல்ல வேண்டும்” எனச் சொல்லி அனுமதி மறுத்தார்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புஸ்ஸி ஆனந்திடம் சீறிப்பாய்ந்த பெண் எஸ்.பி இஷா சிங் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் தாத்தா, அப்பா இருவரும் ஐபிஸ் அதிகாரிகள்.
இஷா சிங் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றிவர். விஷ வாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு வழக்கு தொடர்ந்து 10 லட்சம் இழப்பீடு பெற்று தந்தவர். புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையில் நற்பெயர் பெற்று பதவி உயர்வுக்கு வந்தவர்.
"யாராக இருந்தால் என்ன; சட்டத்தின் முன் அனைவரும் சமம்" அதை நடைமுறைப்படுத்தவே ஐபிஸ் ஆனேன்’ என்று தெரிவித்தவர்.
டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்.பி இஷா சிங் ஆகிய இரு காவல்துறை அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள். இத்தகைய அதிகாரிகள் இருந்திருந்தால் கரூர் துயரம் நிச்சயமாக நிகழ்ந்திருக்காது...!
---PS Parthi