கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் இன்று தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தெனிந்திய இயற்கை வேளாண் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்து ஆண்டுக்கு 6000 உதவித்தொகை வழங்கும் பி எம் கிஷான் திட்டத்தில் 21 வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 18000 கோடி உதவி தொகையை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணையும் படைக்கின்றோம், மேலும் கம்பு சாமை உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக உள்ளது. ஒரு பயிர் வேளாண்மையிலிருந்து ஊடு பயிர் சாகுபடி முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும் இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.