10.லட்சம் பணம் தராமல் இருக்க பெண் எரித்து கொலை.
10 December 2025
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே வனப்பகுதியில் கடந்த ஆறாம் தேதி உடல் கருகிய நிலையில் 45 வயது மதிக்கத் தக்கது. பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் உடல் அருகே காலி மது பாட்டில்கள் கிடந்தன அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினருக்கு தகவல் அந்தப் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண்ணை தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு உடலை எரித்து இருப்பது தெரிய வந்தது
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தார் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக கொலையாளி யைபிடிப்பதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தன்று ஸ்கூட்டரில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் ஸ்கூட்டரில் வருவது பதிவாய் இருந்தது இதையடுத்து அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதன்படி கொலையான பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி ஏகலயாபாளை யம் புதூரைச் சேர்ந்த துரை என்பதாகும் வரது மனைவி வடிவுக்கரசி அவரை அழைத்து வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்
இதை அடுத்து சங்கரை தனிப்படை போலீசார் தேடினர் அப்போது அவர் தாராபுரத்தை அடுத்து அலங்கியம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அலங்கியத்துக்கு வந்து தனிப் படை போலீசார் சங்கரை மடக்கி பிடித்து கைது செய்தனர் பின்பு அவரிடம் விசாரணை நடத்தினார். யுள்ளார் 1998 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார் என்பது தெரிய வந்தது
மேலும் அதே பகுதியில் உள்ள துரைசாமி என்பவரின் மனைவி வடிவுக்கரசி இடமும் பழக்கம் ஏற்பட்டது வடிவுக்கரசியின் உறவினர்கள் பலரிடம் சங்கரும் வடிவுகரசியும் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை பெற்றுள்ளனர் என்று சொன்னபடி சங்கர் அரசு வேலை வாங்கித்தராதால் வடிவுக்கரசியின் உறவினர்கள் வடிவுக்கரசியை பணம் கேட்டு நெருக்கடி கொடுத் துள்ளனர் அதைத் தொடர்ந்து வடிவுக்கரசி சங்கரிடம் உறவின ர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி தர கேட்டுள்ளார் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு மேலும் வடிவுக்கரசி சங்கரை தொட ர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்
இதனிடையே சங்கர் வடிவுக்கர சியிடம் வெள்ளகோவில் அருகே உள்ள தாசன் நாயக்கன்பட்டியில் என் மனைவியின் உறவினர் என்னிடம் இருக்கிறார். பணம் கேட்டுள்ளேன். அதை வாங்கித் தருகிறேன் வா என்று தனது ஸ்கூட்டரில் வடிவுக்கரசியை அழைத்து வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர் இருவரும் வட்டமலை அணை பகுதிக்கு சென்று மது அருந்தி உள்ளனர் அப்போது மீண்டும் இருவருக்கும் பண பிரச்சினை ஏற்பட்டுள்ளது அடைந்த சங்கர் ஆத்திரத்தில் அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து வடிவுக்கர சியின் தலையில் போட்டுள்ளார் அதனால் சிறிது நேரத்தில் அவர் துடி துடித்தார் இறந்துள்ளார் பின்பு வடிவுக்கரசி அணிந்திருந்த ஆறு பவுன் நகையை கழட்டிக்கொண்டு அடையாளம் தெரியாமல் இருப் பதற்காக அவர் முகத்தை சிதைத்து எரித்தும் விட்டு தப்பி சென்று விட்டுள்ளார் சங்கர்.இதை தொடர்ந்து சங்கரிடமிருந்து ஆறு பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.