பள்ளிவாசல் நிர்வாகிகள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை
08 December 2025
திருப்பூர் மாவட்ட ஐக்கியஜமாத் (தெற்கு பகுதி) நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து பொது மக்களின் நலன் குறித்து முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
சத்யா, வெங்கடேஸ்வரா நகர் மற்றும் பெரியதோட்டம் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றினைந்து, தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேயர் தினேஷ்குமார் இரண்டு, மூன்று தினங்களுக் குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிவாசல் நிர்வாகி களிடம் உறுதியளித்தார்.
இதில் பெரிய தோட்டம் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் செயலாளர் முகமது அலி ஜின்னா.மற்றும் நிர்வாகிகள் முஹம்மது.உஸ்மான்.சையத் இப்ராஹிம்.சத்யா நகர் ஃபதுகுல் இஸ்லாம்: பள்ளி வாசல் தலைவர்.அக்பர் அலி. செயலாளர் மைதீன்.நிர்வாகி கள் சாதிக்.யூசுப். அப்பாஸ். வெங்கடேஸ்வரா நகர் பிலால் பள்ளி வாசல் தலைவர் ஜாகீர் சிராஜுல் இஸ்லாம் ஷாஃபி பள்ளிவாசல் பொருளாளர் இப்ராஹி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்