தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்களா??

17 November 2025

நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் பிளாஸ்டிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது பிளாஸ்டிக் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக்கை தினந்தோறும் உபயோகப்படுத்துவது என்பது ஒரு வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பினால் உள்ளிட்ட ரசாயன துகள்கள் உடலுக்கு செல்வதால் மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஓய்வு பெற்ற சித்தமருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து பாரம்பரிய உலோகங்களில் தண்ணீர் குடித்து வந்தால் உடல் நலனையும் காக்கலாம் பிளாஸ்டிக்கையும் விரைவில் ஒழிக்கலாம் என்பது மருத்துவர்களின் சிறந்த ஆலோசனைகளில் ஒன்றாகும்.