மத்திய பட்ஜெட் 2026: சிபிஐ-க்கு ரூ. 1,105 கோடி நிதி ஒதுக்கீடு

01 February 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) ரூ. 1,104.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 1,058.3 கோடியை விட 4.4 சதவீதம் கூடுதலாகும். இந்த கூடுதல் நிதியானது சிபிஐ பயிற்சி மையங்களை நவீனமயமாக்குதல், புதிய தடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்களை அமைத்தல், சிபிஐக்கான பிரத்யேகக் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காகச் செலவிடப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வு மற்றும் வழக்குகளை விசாரிப்பதில் சிபிஐ-யின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.