தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் வரும் 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இது வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரணமாக வருகின்ற 22ஆம் தேதி கடலோர தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது...