மணிப்பூர் புதிய முதல்வராக ஒய். கேம்சந்த் சிங் தேர்வு

03 February 2026

மணிப்பூர் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒய். கேம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் மணிப்பூரின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். மேலும், அம்மாநிலத்தின் துணை முதல்வராக குகி இனத்தைச் சேர்ந்த பெண் தலைவரான நேம்ச்சா கிப்ஜென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து, பைரன் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது வரும் பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில், கேம்சந்த் சிங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. 2027-ஆம் ஆண்டு வரை தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நீடிக்கும் நிலையில், இந்த புதிய அரசியல் மாற்றம் அம்மாநிலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.