கீழடி அகழாய்வு ஆதார பிரச்சினை

13 June 2025

மத்திய அரசை கண்டித்து
திராவிடர் கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

கீழடி அகழாய்வு பிரச்சனையில் கூடுதல் ஆதாரம் கூறும் மத்திய அரசின் எதைச் அதிகாரப் போக்கை கண்டித்து திராவிட கழகம் வரும் 18ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. 
        இதுகுறித்து திராவிடர் கழகத்தினுடைய தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கீழடியை ஏற்றால் திராவிட நாகரிகம் வேதகால நாகரிகம் என்று இவர்கள் சொல்லி வந்த காலத்திற்கும் முந்தையது  என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நேருமே! என்ற காரணத்தினால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலை நிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்.
 இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டு மக்களும் ஆய்வாளர்களும் ஒன்றுபட்டு திரண்டு மக்கள் மன்றத்தின் துணை கொண்டு குரல் கொடுப்பது இன்றியமையாததாகும்.   இவ் விவாகரத்தில் தமிழர்களின் ஒற்றுமையை காட்டும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று பண்பாட்டு சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சி ப்பதையும் காலத்தால் மூத்த தமிழ் எழுத்து வடிவத்திற்கு கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து வருகிற 18-ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.