ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மற்றும் சமரச முயற்சிகள்
06 March 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சில நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளை வரவேற்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்றும், அதன் பிறகே தகுதியான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஈரான் அதிபர், நாட்டின் கண்ணியத்தையும் இறையாண்மையையும் காப்பதில் தங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்றும், இந்தப் போரைத் தொடங்கியவர்களிடமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போது 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில் இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.