ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரி நள்ளிரவில் படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
17 March 2026
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் (IRGC) மூத்த ராணுவ தளபதியும், பசிஜ் துணை ராணுவத்தின் தலைவருமான குலாம்ரெசா சுலைமானி, இஸ்ரேல் நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் தலைமையகத்தைத் தவிர்த்துவிட்டுத் தனித்திருந்த கூடாரத்தில் அவர் தங்கியிருந்தபோது, இஸ்ரேலியப் படைகள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி அவரை வீழ்த்தியுள்ளன. அவருடன் துணைத் தளபதி சையது கரிஷியும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெஹ்ரான் மற்றும் லெபனானின் பெய்ரூட் பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்துப் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இருப்பினும், இந்த உயிரிழப்புகள் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உடனடி உறுதிப்படுத்தல் ஏதும் வெளியாகவில்லை.