இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 74 ரன்களில் சுருண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென்னாபிரிக்க அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குயிண்டன் டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்பர் எண்களே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்..
இதனால் தென் ஆபபிரிக்கா அணி
74 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி அடுத்த போட்டி 11ஆம் தேதி நடைபெறுகிறது..