சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளுக்கும் அந்த பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமிகள் தாயிடம் தெரிவித்த பின்பு அந்தப் பெண் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை இன்று அதிரடியாக சரியாக கைது செய்தனர்...