அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் சமீபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் என்ற பெயரில் ஒரு போட்டோ சூட் முதல்வர் நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் 60 சதவீதம் பேருக்கு கூட உணவுகள் இநியோகம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கோவையில் செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டுவரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும் ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவு படுத்துவதிலும் திமுக வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல உலகிலே எவரும் இல்லை தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக அவர்களுக்கு உரிய மரியாதை உடன் செயல்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்...