நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

10 December 2025

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை  மாலைய கவுண்டன்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொற்றவை நீயூஸ் நிருபர்,
ச.சந்திரமோகன்,
திண்டுக்கல் மாவட்டம்