விடூர் அணைக்கட்டு, ஆற்றில் குளிக்கத் தடை!

06 November 2025

விடூர் அணைக்கட்டு, ஆற்றில் குளிக்கத் தடை!


விழுப்புரம்: அணைக்கட்டு மற்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களின் பார்வைக்காக எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. வீடூர் அணைக்கு விடுமுறை நாட்களில் பொது மக்கள் அதிகம் வருவதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அணைகட்டு அருகே நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் பொதுமக்கள் இறங்காத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் -
ஆ.ஆகாஷ், விழுப்புரம்