அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தீபாவளிக்கு மறுநாள் மேலும் காற்றழுத்தம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியுள்ளது.
அதே நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்றும் நீடித்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. அதே நேரத்தில் இன்று முதல் மேலும் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.