சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதி உதவி

22 November 2025

புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த அழகேசன் கடந்த 19ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்....