காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் இயற்பியல் துறையும் தேவகோட்டை ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் இயற்பியல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் இயற்பியல் துறையும் தேவகோட்டை ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் இயற்பியல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
வளர்ந்து வரும் கால சூழலில் அறிவியல் கல்வி மற்றும் கண்டுபிடிப்பின் தேவைகள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களை சிந்திக்க வைத்து புதிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வைக்க வேண்டியது கல்வி நிறுவனங்களின் தலையாய கடமை ஆகும் . இதன் அடிப்படையில் அழகப்பா அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி மற்றும் ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் நாவுக்கரசு ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இரு கல்லூரிகளின் இயற்பியல் துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக இரு கல்லூரியின் இயற்பியல் துறைகளும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளுதல், கருத்தரங்குகள், அறிவியல் மாநாடு நடத்துவது போன்றவை நடைபெற்றது.