குழந்தைகள் தினத்தில் விமானத்தில் பயணித்த 30 ஏழை குழந்தைகள்

14 November 2025

குழந்தைகள் தினமான இன்று பிரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை சார்பில் வானமே எல்லை எனும் ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சியை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தனர். மேலும் இந்த விமான பயணத்தில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குழந்தைகளுடன் பயணித்தார். மேலும் இதில் டிரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்பு அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள வேல் வித்யாலயா நிறுவனத்திற்கு சென்று அங்கு குழந்தைகள் தின சிறப்பு கொண்டாட்டமும் நடைபெற்றது.