திடீரென தீப்பிடித்த கார் டிரைவர் உட்பட இரண்டுபேர் உயிர் தப்பினர்

11 December 2025

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ஹசீத் காதர் (30), திண்டுக்கல்லை சேர்ந்த கார் ஷோ ரூமின் மேலாளர் காளிதாஸ் (30). இருவரும் திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் பயணம் செய்தனர் காரை ஹசீத் காதர் ஓட்டினார் 


கார் காதபுள்ளப்பட்டி என்ற ஊர் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் லேசான புகை வந்து விடுகிறது இதைப் பார்த்து அதிரிச்சியடைந்த காளிதாஸ் ஹசீத் காதர் இருவரும் காரை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கினர் சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது 

அருகில் இருந்த டோல்கேட் ஊழியர்கள் காரின் தீயை அணைக்க போராடினர் ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை 
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர் ஆனாலும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமா னது. 

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து காரில் தீடீரென தீயினால் கார் எரிந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.