மூவர் வளவனூரில் கைது
								01 November 2025 
									
								
								
								
								மதுபானம் கடத்திய மூவர் வளவனூரில் கைது
	
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியின்போது வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த ஆனந்தகுமார் (29), சிவசங்கர் (28), விஜய் (30) ஆகிய மூவரை லிங்கா ரெட்டி பாளையம் அருகே கைது செய்தனர். இவர்களிடமிருந்து 900 பாட்டில் (90 மில்லி) மதுபானங்கள், 20 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.