சிறுவனுக்கு நூதன தண்டனை
01 November 2025
விழுப்புரம்: விபத்து வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விராட்டிக்குப்பம் பைபாஸ் அருகே நடந்த விபத்தில், 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமார் பெருமாள் (36) கடுமையாக காயமடைந்த வழக்கில், விழுப்புரம் இளம் சிறார் நீதிமன்றம் சிறுவன் 2025 நவம்பர் 1 முதல் 2026 ஜனவரி 31 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.