கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நேற்றிரவு நள்ளிரவில் இருசக்கர வாகனம் விபத்து: மோகன் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி; இருவர் படுகாயம்!
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். உளுந்தூர்பேட்டை சிவன் கோவில் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, நகரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகில் எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் மோகன் என்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே தவறி விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.