51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்
30 November 2022
குழந்தையாக இருந்தபோது
கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ
பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.அமெரிக்காவின்
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53. 1971-ஆம்
ஆண்டு அவர் 22 மாத குழந்தையாக இருந்தபோது ஃபோர்ட் வொர்த் நகரில் உள்ள அவரது வீட்டில்
இருந்து குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்டார்.பல ஆண்டுகளாக
குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடைசியாக ஓர் இணையதள நிறுவனத்துக்கு
வந்த டிஎன்ஏ மாதிரிகள் பொருந்திப் போனபோதுதான் அவர் குடும்பத்துடன் சேர முடிந்தது.
இந்த இணையதளம் டிஎன்ஏ பரிசோதனைகளைச் செய்வதுடன் மரபு ரீதியிலான குடும்ப வரைபடத்தையும்
உருவாக்குவதற்கு உதவுகிறது.நீண்ட காலமாக
"மெலனி" என்று அறியப்பட்டு வந்த, மெலிசா ஹைஸ்மித் இப்போது தனது பழைய பெயரையே
வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.