நடப்பு கல்வியாண்டிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்?

03 September 2021

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

 

 

 

 

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பங்கேற்கவுள்ளார். நடப்பு கல்வியாண்டிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.