ஆட்சிக்கு வராத முன்னரே நிலம் அபகரிப்பில் ஈடுபடுவதா ?

08 March 2021

கரூர் அருகே தேர்தல் பணிமனைக்காக அடுத்தவர் நிலத்தில் அடியாட்களுடன் ஜரூராக தேர்தலுக்கு புள்ளையார் சுழி போடும் திமுக வினரால் பரபரப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின்  பாதுகாவலரின் நிலத்தினையே அபகரிக்க முயற்சித்து அதில் பணிமனை அமைத்து வரும் திமுக இது கரூர் கூத்து 
கடந்த திமுக ஆட்சியின் போது நில அபகரிப்பு, அடுத்தவருடைய நிலத்தினை தாங்கள் பட்டா போட்டுக் கொள்வது என்று பல்வேறு தரப்பு சர்ச்சைகளால் தான் அந்த ஆட்சியினை மக்கள் தூக்கி எரிந்தனர். இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வராத போதே அதுவும் திமுக வின் தேர்தல் பணிமனைக்காக அடுத்தவர் நிலத்தினை அபகரித்து அதில் சொந்தம் கொண்டாடி வரும் திமுக வினரின் அராஜக செயல் அரங்கேறியுள்ளது.

கரூர் அடுத்த சின்ன கோதூர் பகுதியினை சார்ந்தவர் வி.பி.ராசப்பன் இவர்., 1992 முதல் 2010 வரை முன்னாள் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா  பாதுகாவலராக இருந்து வந்தவர்.

இந்நிலையில் 2011 முதல் 2018 தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு பி.எஸ்.ஒ ஆக இருந்து வந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 19 செண்ட் நிலத்தில், திமுக வினர் தங்களது பணிமனையை அமைக்க முற்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்குள்ள திமுக நிர்வாகிகள் சிலர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு நடந்து வரும் நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு சின்ன கேதூர் 1 வது வார்டு பகுதிக்கு திமுக வினர் அடுத்தவர் வீட்டு நிலத்தினை அபகரித்து பணிமனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதுவும் ஜெ.ஜெயலலிதா அவருடைய பாதுகாப்பாளருடைய நிலத்தினையே அப்படியே காரியாலயம் எனப்படும் பணிமணை போட்டு விட்டு அதனை சொந்தம் கொண்டாட முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் வி.பி.ராசப்பன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் புகார் அளித்ததன் பேரில், கரூர் காவல் ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன் விசாரணை நட்த்தியதில் பேரில் அந்த வேலையை நிறுத்தினர்.

ஆனாலும், திமுக கட்சியினை சார்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் 15 நபர்கள் வந்து பிரச்சினை செய்து, அந்த நிலத்திற்கும் அவர்கள் பத்திரம் வைத்துள்ளதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.

கரூர் காவல்நிலைய ஆய்வாளர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் வரை அங்கே யாரும் செல்ல கூடாது என்று கூறி பிரச்சினையை முடித்து வைத்தார். ஆனால் அதையும் மீறி, திமுக வழக்கறிஞர்கள் அணியினை சார்ந்த வழக்கறிஞர்கள் அப்பகுதியில் முகாந்திரம் இட்டு அடியாட்களுடன் அமர்ந்து தற்போது பணிமனை அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்சிக்கு வராது போதே, திமுக வினர் அடியாட்களுடன் வந்து அடுத்தவர் நிலத்தினை அபகரிக்கும் பொருட்டு தற்போது ஜரூராக தேர்தல் பணிமனையினை அமைத்து வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட செல்வராணி குற்றம் சாட்டியுள்ளார்.

பேட்டி : செல்வராணி – முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய பாதுகாப்பாளர் ராசப்பன் அவருடைய மனைவி